தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் நபார்டு
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்
தரமான விதை உற்பத்தி திட்டம்

சேலம் மாவட்ட 'தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி வங்கியின்' உதவியுடன் 'தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் - வேளாண்மை அறிவியல் நிலையம்', சந்தியூர், சேலம் வாயிலாக இயங்கி வந்த திட்டமான 'சேலம் மாவட்டத்திற்க்கான தானியப்யிர்கள், எண்ணைவித்துப் பயிர்கள் மற்றும் பயிறுவகை பயிர்களின் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள்'.

இந்த திட்டத்தின் மூலமாக சேலம் மாவட்ட வட்டாரங்களான, தாரமங்கலம், நங்கவல்லி, எடப்பாடி, ஓமலூர், சேலம், அயோத்தியாபட்டினம், மற்றும் கெங்கவல்லி விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி தொழில்நுட்ப உத்திகளை பயிற்சிகளின் மூலமாகவும் செயல்விளக்கங்களின் மூலமாகவும் தரப்பட்டது.

வேளாண் உற்பத்தியில் தரமான விதைகளை உபயோகிப்பது மிக முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதிக இனத்தூய்மையும், கல், மண், தூசி, பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காததும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியையும் கொடுக்கவல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும். தரமான விதை உற்பத்தி செய்ய சில முக்கிய வழி முறைகளும் அதன் தொழில் நுட்பங்களையும் பார்ப்போம். 

தானியப் பயிர்கள்
Photo Oneதமிழகத்தில் தற்பொழுது தானியப் பயிர்கள் மிக அதிக அளவில் பயிரிடப்படுகிறது, நாம் ஒவ்வொரு பருவத்திலும் அறுவடை செய்த நெல்லை விதைகயாக உபயோகிக்கின்றோம். அந்த விதைகள் நல்ல தரமானவைதான என்னைபதை பெரும்பாலும் அறிவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு பருவத்திலும் எடுக்கப்பட்ட நெல் மணிகளை தொடர்ந்து விதைகயாகப் பயன்படுத்துவதால் அவற்றின் வீரியம் குறைத்து விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. முறையான தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதன் முலம் உற்பத்தி திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பதிவு நாள் : 24.03.2015 · விரிவான விபரங்களுக்கு · முழு விளக்கம்
எண்ணைவித்துப் பயிர்கள்
Photo One எண்ணைவித்து பயிர்களில் சேலம் மாவட்டத்தில் மிக முக்கியமாக வேர்கடலை மற்றும் எள் பயிரானது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பூச்சி நோய் தாக்காததும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியையும் கொடுக்கவல்ல விதைகளே தரமான விதைகள் இவ்வாறான தரமான எண்ணைவித்து பயிர்களுக்கான விதைகளை உற்பத்தி செய்யும் முக்கிய வழி முறைகளை பார்ப்போம்.
பதிவு நாள் : 24.03.2015 · விரிவான விபரங்களுக்கு · முழு விளக்கம்
பயிறுவகை பயிர்கள்
Photo Oneபயறுவகை பயிர்கள் பெரும்பாலும் மானாவாரியாகப் பயிர் செய்வதாலும், உயிர் விளைச்சல் ரகங்களை பயன்படுத்தாதலாலும் மற்றும் தரமான வதையை பயன்படுத்தாதலாலும் குறைவான மகசூல் தான் பெறப்படுகிறது. விதை தரமானதென்றால் அது தனது பாரம்பரிய குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். உளுந்து பயிரானது சேலம் மவட்டத்தில் சுமார் 78.8 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது 4.195  மில்லியன் டன் உற்பத்தி செய்யபடுகிறது.
பதிவு நாள் : 24.03.2015 · விரிவான விபரங்களுக்கு · முழு விளக்கம்
மற்ற பயிர்கள்
Photo Two தானியப் பயிர்கள், எண்ணைவித்து பயிர்கள் மற்றும் பயறுவகை பயிர்கள் அல்லாத பிற பயிர்களும் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு வருகிறது, குறிப்பாக தோட்டக்கலை பயிர்களின் தேவை அதிகரித்துக்கொன்டும் வருகிறது அதற்கேற்ப விதைகளின் தேவையும் உள்ளது. விரைவில் சேலம் மாவட்டத்திற்கான மிகமுக்கிய தோட்டப்பபயிர்க்கான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்யவுள்ளோம்.
பதிவு நாள் : 24.03.2015 · விரிவான விபரங்களுக்கு · முழு விளக்கம்
உடனடி தொடர்புக்கு
Tel: +91-427-2422550
Fax: +91-427-2422269
E-Mail : kvksalem@gmail.com
Web : http://www.kvksalem.org
தளத்தின் நோக்கம்
சேலம் மாவட்டத்திற்க்கான தானியப்யிர்கள், எண்ணைவித்துப் பயிர்கள் மற்றும் பயிறுவகை பயிர்களின் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள்' திட்டம் சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற்றது மட்டுமில்லாமல் மற்ற அனைவரும் பயன்பெற இந்த வலைத்தளம் உறுதுணையாக இருக்கும்

செய்தி துளிகள்
24.03.2015 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் அவர்களால் இவ்வலைத்தளம் துவக்கிவைக்கப்பட்டது

சிறப்பு நன்றிகள்
ICAR
NABARD
TNAU Agriteck Portal
State Agrl Department
Seed Producers Associations
This Website Designed by Shanmugasundaram.B, Computer Programmer, KVK-Salem